×

எருது விடும் போட்டியில் 142.5 மீட்டர் தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து சாதனை வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்: உசேன் போல்ட்டை முந்தினார்

மங்களூரு: கர்நாடகாவில், மங்களூரு மாவட்டம் மூடபிதரி தாலுகாவை சேர்ந்தவர் சீனிவாஸ் கவுடா (28). இவர் சில தினங்களுக்கு முன் கிராமத்தில் நடைபெற்ற சகதியில் இரண்டு காளைகளை 142.5 மீட்டர் தூரத்துக்கு விரட்டி செல்லும் கம்பளா போட்டியில் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொண்டவர் 142.5 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதற்கு முன் அமெரிக்காவை சேர்ந்த உசைன்போல்ட் என்பவர் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடி ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். அவருடைய சாதனையை சீனிவாஸ் கவுடா தற்போது முறியடித்துள்ளார்.

இவரது சாதனைகள் குறித்து சமுக வலைதளங்கள், இணைய தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதை பார்த்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண்ரீஜீஜூ இவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக டூவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதே போல் மகேந்திரா கம்பெனி இயக்குனர் ஆனந்த மகேந்திர கூட இவருக்கு டூவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இது தொடர்பாக சீனிவாஸ்கவுடா கூறுகையில், ‘‘ உசைன்போல்ட்டுடன் என்னை  இணைத்து பேசி வருகின்றனர். ஆனால், அவர் உலக சாம்பியன் விளையாட்டு வீரர். நான் சகதி போட்டியில் வெற்றி பெற்றவன்,’’ என்று பணிவுடன் தெரிவித்தார்.


Tags : Hussein Bolt , The bull race, a 142.5-meter hurdle, crossed the record in 13.62 seconds
× RELATED 800 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்!